சர்கார் வசூலை தொட முடியாத ‘தர்பார்’ : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

சர்கார் வசூலை தொட முடியாத ‘தர்பார்’ : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் இந்த படம் 34.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேநேரத்தில் இந்த படம் சென்னையில் 2.27 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ரஜினியின் முந்தைய படமான 2.0 படத்தின் வசூலையும் ஏஆர் முருகதாஸின் முந்தைய படமான சர்க்கார் படத்தின் வசூலையும் தர்பார் திரைப்படத்தின் வசூல் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியின் முந்தைய 2.0 சென்னையில் முதல் நாளில் 2.67 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் ஆர் முருகதாஸ் முந்தைய படமான சர்க்கார் ரூபாய் 2.34 கோடி முதல் நாளில் சென்னையில் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

சர்க்கார் படத்தின் வசூலை தர்பார் திரைப்படம் முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு கொண்டாலும், சென்னை முதல் நாள் வசூலில் இன்னும் முதலிடத்தில் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply