‘தர்பார்’ வசூல் இத்தனை கோடியா? லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த ஒன்பதாம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் ஒரே நாளில் 34 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் நான்கு நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலை தெரிவித்து வரும் நிலையில் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வசூல் விபரங்களை தெரிவித்துள்ளது

இந்த படம் வார இறுதி நாட்களில் மட்டும் ரூபாய் 150 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினியின் தர்பார் படம் கிட்டத்தட்ட முதலீட்டை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரூபாய் 200 பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply