5 வருட காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீபன் ஸ்மித்

5 வருட காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீபன் ஸ்மித்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்டீபன் ஸ்மித் பொறுப்பேற்ற பின்னர் அணி முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஸ்மித்தின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆம், இதுவரை விளையாட்டு களத்தில் மட்டும் மூழ்கியிருந்த ஸ்மித், இனி குடும்பக்களத்திலும் குதிக்கவுள்ளார்

ஸ்டீபன் ஸ்மித் அவர்களுக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான டெனி வில்ஸ் என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் இருவீட்டார் உறுதி செய்தூள்ளனர்.

கடந்த 2012-ம் வருடம் முதல் ஸ்மித்-டேனிவில்ஸ் நட்பாக பழகி வந்த நிலையில் அந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றார் ஸ்மித். அவருடன் அவர் காதலி டேனியும் சென்றிருந்தார். இந்நிலையில் டேனியுடன் தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஸ்மித் அறிவித்துள்ளார்.

Leave a Reply