உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து இருந்துகொண்டேதான் இருக்கின்றது. அதையும் மீறித்தான் அவர்கள் செய்தி சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனை சேர்ந்த தனியார் நிறுவனமான சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் எவை என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இதில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இருப்பதில் முதலிடம் வகிப்பது சிரியாதான். இந்த நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இரண்டாவது இடத்தை ஈராக் பெற்றுள்ளது.
மூன்றாவது இடம் பிலிப்பன்ஸ் நாட்டிற்கும், நான்காவதாக இந்தியா மற்றும் ஐந்தாவதாக பாகிஸ்தானும் பெற்றுள்ளது இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருப்பதாக கூறப்பட்டாலும், சென்ற ஆஅண்டில் இதுவரை 13 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதால் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிகை நிருபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி அவர்களின் உயிர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க உலகம் முழுவதும் உள்ள நாடுகள் முன்வர வேண்டும் என சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.