shadow

இந்தியா-தென்னாப்பிரிக்க முதல்டெஸ்ட் போட்டி: டேல் ஸ்டெயின் திடீர் விலகல்

இந்தியாவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெறும் முதல் டெஸ்டில் டேல் ஸ்டெயின் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1992-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை வென்றது கிடையாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியால் தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.

சொந்த மண்ணில் எக்காரணத்தைக் கொண்டும் இந்தியாவிடம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதில் தென்ஆப்பிரிக்கா உறுதியாக இருக்கிறது. இதற்காகவே டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்து டி வில்லியர்சை மீண்டும் டெஸ்டிற்கு தென்ஆப்பிரிக்கா அழைத்துள்ளது. அதேபோல் ஓராண்டுகளாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின்-ஐ இந்திய அணிக்கெதிராக விளையாட வைக்க திட்டமிட்டது.

இந்திய தொடருக்காக ஸ்டெயின் தயாராகி வந்தார். முதன்முறையாக ஜிம்பாப்வேயிற்கு எதிரான நான்கு நாள் பகல்-இரவு டெஸ்டில் களம் இறங்கினார். அப்போது சில ஓவர்கள் வீசிய ஸ்டெயின் வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டார்.

தற்போது இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தார். அவருடன் ரபாடா, மோர்னே மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இதனால் ஆடும் லெவன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் தென்ஆப்பிரிக்கா நிர்வாகத்திற்கு பெரிய சவாலா இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டெயின் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் ‘‘ஸ்டெயின் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதனால் முதல் போட்டியில் விளையாடமாட்டார்’’ என்றார்

Leave a Reply