17,000யை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அது 17,073 ஆக அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடுவதால்தான் இந்த அளவுக்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 21 ஆக பதிவாகி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 92,576ல் இருந்து 94,420 ஆக அதிகரித்துள்ளது.