கடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி டி.கே.ஜோஷி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில்:
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் இப்படிப்பட்ட ஆயுதம்தாங்கிய காவலர்களின் நடமாட்டம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இவர்களுக்கு கடிவாளம் போடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சர்வதேச கடல்சார் அமைப்பிடம் (ஐஎம்ஓ) இந்திய கடற்படை வலியுறுத்தி உள்ளது. இந்தக் கப்பல்களை, அவற்றில் உள்ள ஆயுதங்களை, அதன் காவலர்களை பின்தொடர ஒருவரும் இல்லை. எனவே அவற்றை சர்வதேச ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 140 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை பணி அமர்த்தி உள்ளன. இவர்கள் கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்ற கப்பல்களுக்கு மாறுகின்றனர். அதற்கான அனுமதியும் அவர்களிடம் இருப்பதில்லை.
இப்படித்தான் சமீபத்தில் தூத்துக்குடி அருகே ‘எம்வி சீமேன் கார்டு ஓயோ’ என்ற ஆயுதக்கப்பல் பிடிபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.