ஐபிஎல் 2018: பயிற்சியை தொடங்கிய தல தோனியின் சிஎஸ்கே

ஐபிஎல் 2018: பயிற்சியை தொடங்கிய தல தோனியின் சிஎஸ்கே

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளதை அடுத்து இதில் கலந்து கொள்ளும் அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது பயிற்சிக்களத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வந்த வண்ணம் மூத்த வீரர்களான ஹர்பஜன் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ ஆகியோர் நேற்று சென்னை வந்தடைந்தனர். இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஆன டோனி விளையாடவில்லை.

அந்த சமயத்தில் ஓய்வு எடுத்த டோனி, நேற்று சிஎஸ்கே அணிக்காக முதன்முறையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவருடன் அம்பதி ராயுடு, ஜடேஜா, ரெய்னா, ஷர்துல் தாகூர் ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் டோனியை ‘தல’ என குறிப்பிட்டுள்ளது. ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

Leave a Reply

Your email address will not be published.