நேற்றைய போட்டியில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய சாதனை: பிளே ஆஃப் செல்லுமா?

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய சாதனை: பிளே ஆஃப் செல்லுமா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த வெற்றி தற்போது மிகப்பெரிய சாதனை வெற்றி என்பது தெரிய வந்துள்ளது

இந்த தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்ச வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போட்டியாக இருந்தது

ஆனால் நேற்று சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி சென்னை அணி என்று தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இன்னும் மூன்று போட்டிகள் சென்னை அணிக்கு இருக்கும் நிலையில் மூன்றிலும் இதே போன்ற வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது