நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்தது

இதன்பின் 221 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது என்பதால் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் மிக அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்த டூபிளஸ்சிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply