shadow

தல தோனி தலைமையிலான் சிஎஸ்கே அணியின் செயலி வெளியீடு

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய், வெய்ன் பிராவோ, டு பிளிசிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ செயலி தற்போது வெளியாகியுள்ளது. அந்த செயலியை ரவிந்திர ஜடேஜா தொடங்கி வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே செயலி) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த செயலியில் ரசிகர்கள் சென்னை அணியின் ஜெர்சி உள்ளிட்ட மெர்சன்டைஸ்களையும், போட்டிகளுக்கான டிக்கெட்களையும் வாங்கலாம்.

கடந்த திங்கள்கிழமை வெளியான இந்த செயலியை இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply