சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவன கூட்டமைப்பான ‘CREDAI’ மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘JONES LANG LASALLE’ சார்பில் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடந்தது.

கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, சந்தை நிலவரம், குடியிருப்பு சொத்து வகைகள், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் காரணிகள், சந்தையில் உடன் நிகழக்கூடிய மாற்றங்கள், முதலீட்டுக்கான வழிகாட்டல்கள் குறித்து ஆராயப்பட்டது.

ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தமிழ்நாடு ‘CREDAI’ அமைப்பின் தலைவருமான சந்தீப் மேத்தா கூறியதாவது:–

ரியல் எஸ்டேட் என்றும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. சமீப காலமாக தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் கவனம் ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியுள்ளது. ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு அதிக லாபம் கொடுப்பதாக இருப்பது இதற்கு காரணம். ரியல் எஸ்டேட் முதலீடு சில ஆண்டுகளில் பலமடங்கு லாபத்தை கொடுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

இடத்துக்கு ஏற்ப வருமானம் சிறிதளவு மாறுபடும் என்றாலும் மதிப்பு குறையாது. சென்னையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் செலவீனங்கள் போக சேமிப்பில் கணிசமான தொகை ஒதுக்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற சிறந்த முதலீடாக ரியல் எஸ்டேட் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

சந்தீப் மேத்தா
உலகளவில் முக்கிய நாடுகளில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவில் மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 26வது இடத்தில் உள்ளது” என்றார்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1efKlQP” standard=”//www.youtube.com/v/OlYl_lQFoXs?fs=1″ vars=”ytid=OlYl_lQFoXs&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5447″ /]

 

Leave a Reply