26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்
இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த இசை கலைஞர் ஒருவர் தனது 21-வது வயதில் புற்று நோயால் அவதிப்பட்ட போது அவருக்கு ‘ஹீரோ தெரபி’ என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்த காரணத்தால் அவர் தனது உயிரணுவை எடுத்து உறைந்த நிலையில் வைத்து பாதுகாத்து வைக்க மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார்
அதன்பின்னர் அவருக்கு புற்று நோய் குணமாகிய தனது 47-வது வயதில் அவர் 37 வயது பெண்ணை திருமணம் செய்தார். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய அந்த தம்பதி உறைந்த நிலையில் பாதுகாத்து வந்த உயிரணு மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றனர்.
இந்த இரட்டையர்களில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் குழந்தையாகும். இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு உறைந்த உயிரணு முலம் செயற்கை முறையில் கருவுற செய்து குழந்தைகள் பெற்றனர்.
இசை கலைஞரின் உயிரணு 26 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இசைக் கலைஞர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.
ஆனால் இதற்கு முன்பு அலெக்ஸ் போவெல் என்பவர் 23 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த தனது உயிரணு மூலம் குழந்தை பெற்றார். அதுவே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது இச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்களின் உயிரணுக்களை 40 ஆண்டுகள் வரை உறைய வைத்து பாதுகாக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் உயிர் வாழும் என்று உறுதியாக கூற முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.