சிஐஏ போராட்டத்தை தூண்டியதாக ஐஎஸ்ஐ இயக்கத்தின் தம்பதிகள் கைது

நாடு முழுவதும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தை தூண்டியதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கணவன் மனைவியை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஜகான்ஜேப் சமி, மற்றும் ஹீனா பஷீர் ஆகிய இருவரையும் டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை தூண்டியதாக கூறப்படுகிறது

மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாக காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply