shadow

மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்படும் மேயர்: சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம்

மாநகராட்சிகளின் மேயரை மக்களே ஓட்டு போட்டு தேர்வு செய்யும் முறை கடந்த சில ஆண்டுகளாக இருந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு கவுன்சிலர்கள் மேயரை தேர்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்து இரண்டு வருடங்கள் கூட முடியாத நிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டமசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி மாநகராட்சி மேயர் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி தலைவர்களையும் இனிமேல் மக்களே தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply