இந்தியாவில் மூன்றாவது கொரானோ நோயாளி: அதிர்ச்சி தகவல்

சீனா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் இந்தியாவையும் தற்போது தாக்க தொடங்கி விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கொரானோ வைரஸ் 28 டிகிரி வெப்பத்துக்கு மேல் இருந்தால் இறந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் 28 டிகிரிக்கு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் கொரானோ பரவும் வைரஸ் தாக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது

இருப்பினும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள் மூலம் கொரானோ வைரஸ் இந்தியாவிலும் பரவி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும் தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கொரானோ வைரஸ் இருப்பதாக செய்திகள் வெளியாகியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்த ஒருவருக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரானோ வைரஸ் தாக்கப்பட்ட அவரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது இதன் பின்னர் உடனடியாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரானோ வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply