நர்ஸ்கள் இருவரை வெளியேற்றிய வீட்டின் உரிமையாளர்கள்

ஒரிசா மாநிலம் எச்சரிக்கை

ஒரிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் பகுதியில் 2 நர்சுகள் குடியிருந்த வீட்டை அந்த வீட்டின் உரிமையாளர்கள் காலி பண்ணச் சொல்லி வற்புறுத்தி அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களௌ காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் செய்ததாக வெளி வந்த தகவலை அடுத்து அமித்ஷாவே தலையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்

இந்த நிலையில் தற்போது ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் நர்சாக பணிபுரிந்து கொண்டிருக்கும் இருவர் தங்கியிருந்த வீட்டை உடனடியாக காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வற்புறுத்தி வீட்டை காலி செய்ய வைத்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து எச்சரிக்கை செய்துள்ள ஒரிசா மாநில அரசு ’மனித நேயத்திற்கு பூட்டு போடாதீர்கள்’ என்று வீட்டின் உரிமையாளர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளது

Leave a Reply