இந்தியாவில் சென்சுரி அடித்தது கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக தினமும் நூற்றுக்கணக்கானோர் மரணம் அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரஸ் இரண்டு உயிர்களை இதுவரை பலியாக்கி உள்ளது

இந்த நிலையில் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் அதிகமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் 20 நபர்களை மட்டும் தாக்கிய இந்த வைரஸ், சற்று முன் வெளியான தகவலின் படி இந்தியாவின் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆகியுள்ளது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து உள்ளதை அடுத்து இந்தியர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர் இருப்பினும் மத்திய மாநில அரசுகள் சுறுசுறுப்பாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கக் கூடிய ஒன்றாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *