கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பீர் கம்பெனி: பரபரப்பு தகவல்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மட்டும் விஞ்ஞானிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த வைரசால் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பீர் கம்பெனி ஒன்று பெரும் பாதிப்படைந்து உள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஐரோப்பாவில் கொரோனா என்ற பீர் கம்பெனி உள்ளது. பலர் இந்த கம்பெனியின் பீரை சாப்பிட்டால் கூட கொரோனா வைரஸ் பரவும் என வதந்தியை கிளப்பி விட்டதால் இந்த பீரின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் பல பல கூகுள் சியர்ச்சில் கொரோனா என்று தேடும்போது இந்த பீர் தான் முதலில் வருவதால் பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்த பீரால் தான் பரவுகிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது

ஆனால் கொரோனா வைரசுக்கும் கொரோனா பீருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என ஒரு சிலர் பதிவு செய்து பொதுமக்களின் குழப்பத்தை நீக்கி வருகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பீர் கம்பெனி பெயரை மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply