சீனர்களின் அதிர்ச்சி ஆய்வு

கொரோனா வைரஸ் விந்தணு மூலமும் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து கொரோனா பாதிப்பு உள்ளவருடன் உடலுறவு கொள்வதன் மூலமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.

சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 38 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களைப் பரிசோதனை செய்ததில் அவர்களுள் 16 சதவீதம் பேரது விந்தணுவில் கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது.

ஆண்களின் விந்தணுவில் கொரோனா வைரஸ் பரவினாலும் அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்றபோதிலும் இவை கருமுட்டையில் செலுத்தப்படும்போது செலுத்தப்பட்டவர் கொரோனாவால் தாக்க வாய்ப்பு இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே உடலுறவு மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆணுறை பயன்படுத்துவது அவசியம் என்றும் அதைவிட கொரோனா பரவும் இந்த காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply