திண்டுக்கல்லில் கொரோனா மாரியம்மன் கோவில்: குவிந்தது பக்தர்கள் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் திடீரென தோன்றிய கொரோனா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே மாசாணியம்மன் கோவிலில் கொரோனா மாரியம்மன் சிலை வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்

இந்த மாரியம்மனை தரிசனம் செய்ய அந்த பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று ஏற்படாது என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது