திருப்பதி ஏழுமலையாலையும் பாதித்த கொரோனா வைரஸ்: அதிர்ச்சித்தகவல்

திருப்பதி ஏழுமலையாலையும் பாதித்த கொரோனா வைரஸ்: அதிர்ச்சித்தகவல்

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் நிலையில் தற்போது ஆயிரக்கணக்கில் கூட திருமலைக்கு பக்தர்கள் வருவது இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக பயணம் செய்வது, ஒரே இடத்தில் கூடுவது ஆகியவை தவிர்க்கும் வகையில் பலர் திருப்பதிக்கு செல்வதை நிறுத்தி விட்டனர். இதனால் திருப்பதியில் கூட்டம் குறைவாக இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தற்போது சுவாமி தரிசனம் செய்ய வரிசைகள் கிடையாது என்றும் நேரடியாகவே சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓரளவு கூட்டம் வந்தால் ஐம்பது ஐம்பது பேர்களாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் வீதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply