லதா மங்கேஷருக்கு கொரோனா மற்றும் நிமோனியா: தீவிர சிகிச்சை

கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பு காரணமாக லதா மங்கேஷ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா மற்றும் நிமோனியா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.