shadow

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பர் கிடைப்பதில் சிக்கல்: அமைச்சர் தங்கமணி

தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அந்த ஆலை சமீபத்தில் இழுத்து மூடப்பட்டது. இதனால் காப்பர் உற்பத்தி தடைபட்டது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், தாமிரத்தை வெளியில் இருந்து வாங்கி அமைக்க வேண்டியுள்ளதால் மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மாற்று இடத்தில் காப்பர் வாங்கப்படுவதாகவும் கூறினார். சிரமம் இருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்க வழியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லை ஆலை மூடப்பட்டதால் காப்பர் தயாரிப்பு குறைந்துள்ளதாகவும், இதனால் காப்பரின் விலை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மிக குறைந்த அளவே காப்பர் ஆலைகள் இயங்கி வந்த நிலையில் அவைகளில் ஒன்று மூடப்பட்டதால் இந்த விலையேற்றம் என கூறப்படுகிறது.

Leave a Reply