தொடரும் மழை பாதிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

குறிப்பாக, சென்னையில் பெய்த மழையால் சில மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி, பயணிகள் பெரும் அவதிக்குள்ளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு, இனி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.