முடிந்தால் என்னை எதிர்த்து போட்டியிட்டு பாருங்கள்: முதல்வருக்கு பிரபல நடிகை சவால்

முடிந்தால் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு பாருங்கள் என நடிகை ஒருவர் முதல்வருக்கு சவால்விட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி எம்பியும் நடிகையுமான நவ்நீத் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் முடிந்தால் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு பாருங்கள் என்றும் மக்கள் பலமும் கடவுளின் அருளும் எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

முதல்வரை எதிர்த்து நடிகை நவ்நீத் சவால் விட்டு விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.