shadow

ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பு எதிரொலி: திருநாவுக்கரசர் பதவி நீக்கமா?

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் மீது காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதால் அவர் விரைவில் பதவியில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருக்கும் ஸ்டாலின் தனது கோரிக்கைகளில் ஒன்றாக திருநாவுக்கரசர் நீக்கம் ஒன்றையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே அதிமுக ஆதரவு நிலையை எடுத்து வரும் திருநாவுக்கரசர், சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு கொடுத்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் தான் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தான் இந்நேரம் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறிய விஷயம் காங்கிரஸ் மேலிடம் வரை சென்றதாகவும், மேலும் திமுகவுக்கு எதிராக அவர் பல நடவடிக்கைகளில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவே காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply