தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்களில் உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் பலன் கிடைக்கவில்லை. அவர்களில் மேல்தட்டுக்களில் இருப்பவர்கள் மட்டுமே பலன் அடைந்து வருகின்றனர். எனவே தற்போதைய இட ஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவிதேதி கூறியிருப்பதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு முறையை பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்தால்தான், உண்மையான சமத்துவ அடிப்படையிலான சமூகம் உருவாகும். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய சுயநலவாதிகள் தடையாக இருக்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். சாதிய தடைகளை தகர்த்து எறிய இளைஞர் இயக்கத்தின் மூலம் முயற்சி செய்வேன் என்று ஜனார்த்தன் திவிதேதி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒரு மூத்த தலைவரே இப்படி பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply