தலைமை நீதிபதி தகுதிநீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு

தலைமை நீதிபதி தகுதிநீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு

சுப்ரீம் கொரொட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்க தீர்மானத்தை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டதால் மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கபில்சிபல் கூறியுள்ளார்.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர். ராஜ்யசபாவில் இடம்பெற்றுள்ள ஏழு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 64 எம்.பி.க்கள் இந்த நோட்டீஸில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் நோட்டீசை நிராகரிப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் துணை குடியரசு தலைவர் நிராகரிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் அவர்கள் கூறியதாவது: தகுதி நீக்க நோட்டீசில் தேவையான எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனால், தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்க குழு அமைத்து துணை ஜனாதிபதி உத்தரவிட்டு இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனு மீது உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். இதனை அடுத்து, மனு மீது ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

Leave a Reply