வீட்டுக்கு போகாமல் சட்டசபையிலேயே தூங்கிய எம்.எல்.ஏக்கள்: பெரும் பரபரப்பு

சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல் சட்டசபையிலேயே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் படுத்து தூங்கியவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா காவிக்கொடி ஒருநாள் தேசியக்கொடி ஆகும் என்று பேசினார்

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

நேற்று இரவு விடிய விடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையிலேயே படுத்து தூங்கி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது