shadow

Congress-MLA-kissed-Nagma-pகடந்த இரண்டு நாட்களாக நடிகை நக்மாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் முத்தம் கொடுத்ததாக செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்து கொண்டுள்ளது. இதற்கு இன்று நடிகை நக்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் நக்மா போட்டியிடுகிறார். அங்கு அவர் பிரச்சாரத்திற்கு சென்றபோது ஹாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ கஜராஜ், நக்மாவை தன் பக்கம் இழுத்து முத்தம் கொடுத்ததாக புகைப்படங்களும், வீடியோவும் வெளியானது. இதுகுரித்து நக்மா கூறியபோது, “காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்னிடம் ஒரு முக்கிய தகவலை காதில் கூற வந்தார். அதிக இரைச்சலாக இருந்ததால் அவர் சாதாரணமாக சொன்னது எனக்கு கேட்கவில்லை. அதனால் எனது காதருகில் அவர் சில தகவல்களை கூறினார். இதை தவறாக ஊடகங்கள் திரித்து செய்தியாக வெளியிட்டுவிட்டது.

உண்மையில் எம்.எல்.ஏ கஜராஜ் என் தந்தையை போன்றவர். நான் முகத்தை மூடி முக்காடு போட்டிருந்தும் எனக்கு முத்தம் கொடுத்ததாக பொய்ச்செய்தியை ஊடகங்கள் பரப்பி வருவது வேதனையை தருகிறது என்று கூறியுள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”650″ editlink=”//bit.ly/OQjQwk” standard=”//www.youtube.com/v/2i8Tmz1HOU0?fs=1″ vars=”ytid=2i8Tmz1HOU0&width=650&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1813″ /]

Leave a Reply