ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.15 கோடி! பாஜக பேரம் பேசுகிறதா?

ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.15 கோடி! பாஜக பேரம் பேசுகிறதா?

குஜராத் மாநிலத்தில் விரைவில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்பிக்கள் பாஜகவினரால் விலை பேசப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு எம்பிக்கு ரூ.15 கோடி என பாஜக பேரம் பேசுவதாகவும் அதற்காகத்தான் அவர்கள் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் எம்பிக்கள் மட்டும் பெங்களூரில் சொகுசு பங்களாவில் சகலவிதமான செளகரியங்களுடன் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இரண்டு கட்சிகளுக்கு இடையே நடைபெறும் குதிரை பேரத்தால் பாதிக்கப்படுவது பொதும்க்கள் தான் என்பதே அனைவரின் அதிருப்தியாக உள்ளது.

Leave a Reply