shadow

காண்டம் பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களின் சதவீதம் 6 மடங்கு உயர்வு

கடந்த பத்தாண்டுகளில் திருமணம் ஆகாத பெண்கள் காண்டம் பயன்படுத்தும் சதவீதம் ஆறு மடங்கு உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தகவல் அளித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வின் அறிக்கையின்படி திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் ஆகியோர் பாதுகாப்பான முறையில் உடலுறவு செய்ய காண்டத்தை பயன்படுத்துவதாகவும், குறிப்பாக 20 முதல் 24 வயதுடைய பெண்களுக்கு காண்டம் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காண்டம் பயன்படுத்துவதில் ஆண்கள் பெரிய அளவில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் இது பெண்களின் பொறுப்பு என்று கருதுவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-2006 ஆம் ஆண்டுகளில் 2 சதவிகிதமாக இருந்த திருமணம் ஆகாத பெண்கள் காண்டம் பயன்படுத்தும் சதவிகிதம், 12 சதவீதம் ஆக 2015-2016 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான பெண்கள் நவீன கருத்தடை முறைப் பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை என்றும் காண்டம் போன்ற பழைய முறையையே அவர்கள் பின்பற்றுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply