shadow

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஓகே. முழுவீச்சில் பின்னணி இசை. பாயத்தயாராகும் புலி
Puli-Movie-Unseen-Photos-6
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் காட்சிகள் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட் காட்சிகள் அனைத்தும் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், கிராபிக்ஸ் காட்சிகளுடனுன் கூடிய முழு படத்தை விஜய் பார்த்து, சிம்புதேவன் உள்பட படக்குழுவினர் அனைவரையும் அவர் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்னும் இந்த படத்தில் இருக்கும் ஒரே வேலை பின்னணி இசை அமைப்பது மட்டுமே என்றும் அதுவும் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் சென்சார் இன்னும் சில நாட்களில் செய்யப்படவுள்ளதால் அதற்குள் படத்தின் பின்னணி இசையை முடிக்கும்படி தேவிஸ்ரீ பிரசாத்திடம் சிம்புதேவன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தேவிஸ்ரீ பிரசாத் இரவுபகலாக பின்னணி இசை பணியை செய்து வருகிறார்.

ரூ.100 கோடிக்கும் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, பிரபு, சுதீப், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படம் இதுவரை இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *