shadow

பணக்காரர் கோவில் திருப்பதியில் பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகையா?

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டிருக்கும் நிலையில், திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், இந்த கட்டுப்பாடுகள் சாதாரண பொதுமக்களை மட்டுமே பாதிக்கப்படும் வகையில் இருப்பதாகவும் குற்றச்ச்சாட்டு எழுந்துள்ளது.,

இணையதளம் மூலம் முன்கூட்டியே ரூ.300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் வசதியை தேவஸ்தானம் தொடர அனுமதித்துள்ள நிலையில் ரூ.50 கட்டணம் செலுத்தி சுதர்சன கங்கண டோக்கன் பெறும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திவ்ய தரிசன முறையும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு மற்றும் மானிய விலை லட்டும் விரைவில் நிறுத்தப்படவுள்ளதாம்

அதேபோல் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு ‘சுபதம்’ பகுதியில் இருந்து சுவாமியை தரிசிக்க தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இனிமேல் இந்த சேவை சில குறிப்பிட்ட தேதியில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதுவும் மாதத்துக்கு 2 முறை மட்டுமே இவர்கள் தரிசிக்க இயலும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் விஐபிக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் குறிப்பாக ஆந்திர, தெலுங்கானா நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோவிலுக்கு வந்தால் அவர்களை தேவஸ்தான உயர் அதிகாரிகளே வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply