பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மீது பலகோடி மதிப்பிலான நிலமோசடி புகார் ஒன்று அவரது சொந்த அண்ணன் மகனே கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகை மனோராமாவிற்கு ஆறுமுகம், கிட்டு என்ற இரண்டு அண்ணன்கள் இருந்தார்கள். இருவரும் இறந்துவிட்டனர். இதில் கிட்டு என்பவரின் மகன் காசிநாதன் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் தங்கள் பாட்டி ராமாமிர்தம் என்பவரின் சொத்து ஒன்று சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் இருப்பதாகவும், அந்த சொத்து மனோரமாவிற்கு அவரது உடன்பிறந்த அண்ணன்களுக்கும் பொதுவான சொத்து என்றும், ஆனால் தனது தந்தைக்கு சேரவேண்டிய சொத்தை கொடுக்காமல் தனது அத்தை மனோரமா அனைத்தையும் அபகரித்து கொண்டதாகவும், சொத்தை கேட்க சென்றால் மனோராமவும் அவரது மகன்களும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும் கிட்டு கூறியுள்ளார். அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு பலகோடிகள் இருக்கும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

அவரது மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் இதுகுறித்து விசாரணை செய்வதாக உறுதி கூறியுள்ளார். இதுகுறித்து மனோரமாவிடம் விளக்கம் கேட்டபோது எங்கள் பூர்வீக சொத்து என்று சொல்லக்கூடிய ராமாமிர்தத்தின் சொத்து என்பது மிகக்குறைந்த அளவுதான் அதன்பின்னர் அந்த இடத்துக்கு பக்கத்தில் நானே எனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கினேன். எங்களது பூர்வீக சொத்துக்குரிய பங்குத்தொகையை எனது அண்ணன்களுக்கு நான் எப்பொழுதோ கொடுத்துவிட்டேன். என்னிடம் பணம் பறிக்கும் திட்டத்தோடு எனது அண்ணன் மகன்கள் பொய்ப்புகார் கொடுத்துள்ளனர். இதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று விளக்கமளித்தார்.

Leave a Reply