குடியரசு தின ஊர்வலத்தில் கலவரம்: 2 வது நாளாக பற்றி எரியும் உபி

குடியரசு தின ஊர்வலத்தில் கலவரம்: 2 வது நாளாக பற்றி எரியும் உபி

நேற்று முன் தினம் நடைபெற்ற குடியரசு தின விழா கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் அமைதியாக நடந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மட்டும இந்த ஊர்வலத்தின்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் நேற்று 2வது நாளாக மோதல் தொடர்ந்ததால் அந்த பகுதியில் மேலும் வன்முறைய ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய இருசக்கர வாகன குடியரசுத் தின ஊர்வலத்தில் மற்றொரு பிரிவினர் திடீரென வன்முறை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், உயிரிழந்த இளைஞருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடைபெறும் போது மீண்டும் வன்முறை வெடித்ததாகவும் உபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

வன்முறை நடந்த பகுதியின் பாதுகாப்பிற்காக மத்திய படைகள் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது அங்கு நிலைமை சீராக இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply