சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைப்பு. இதனால் டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் 1907 என்ற விலையில் விற்பனையாகிறது. டெல்லியில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.899. 50 என விற்பனையாகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்னையில் ரூபாய் ரூ.915 50 என்றும் கொல்கத்தாவில் ரூ.926 என்றும் மும்பையில் ரூபாய் 899. 50என்றும் விற்பனையாகி வருகிறது.