சென்னையில் சிலிண்ட விலை திடீர் அதிகரிப்பு!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்..

இந்த நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.101 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.2234.50 என விற்பனையாகும்.

அதே நேரத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் சமையல் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.915.50 எனவும் விற்பனையாகி வருகிறது என்பதும் அதன் விலை உயரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகப்பயன்பாடுக்கான சிலிண்டர் டெல்லியில் விலை ரூ.2101 என்றும், மும்பையில் விலை ரூ2051 என்றும் கொல்கத்தாவில் விலை ரூ2,174 என்றும் விற்பனையாகி வருகிறது