சிலிண்டர் விலை திடீர் குறைப்பு: இல்லத்தரசிகள் அதிருப்தி

சிலிண்டர் விலை திடீர் குறைப்பு: இல்லத்தரசிகள் அதிருப்தி

ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 116.50 குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.2009க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.116.50 குறைந்ததன் காரணமாக ரூ.1893 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.