மருத்துவமனையில் காமெடி நடிகர் அனுமதி !

பிரபல நடிகர் வெங்கல்ராவ், உடல்நல குறைவால் மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவர் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ், திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் வெங்கல்ராவ் துணை நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.