பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் குள்ளமணி இன்று காலமானார். அவருக்கு வயது 61. இவர் கடந்த ஒரு மாதமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

காலமான நடிகர் குள்ளமணி சுமார் 500 படங்களில் நடித்துள்ளார். கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் போன்ற படங்களில் நடித்துள்ள குள்ளமணியின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மரமடக்கி என்ற கிராமம் ஆகும். இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர்.

குள்ளமணியின் மறைவிற்கு கோலிவுட்டில் உள்ள நடிகர், நடிகைகள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாளை மறுநாள் அவரது சொந்த கிராமத்தில் நடக்க இருக்கிறது.

Leave a Reply