shadow

ஜெயலலிதாவுக்கு வாதாடிய வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

nageswararaoசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சிறப்பு நீதிமன்றம் வழங்கியதை இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா சார்பாகா வாதாடி அவருக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் எ.நாகேஸ்வரராவ், தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கிலும் ஜெயலலிதா சார்பாக வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலிஜியம்’ முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை தற்போதைய மத்திய அரசு அமைத்தது. ஆனால் இதை சுப்ரீம் கோர்ட் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்து, நீதிபதிகளை பரிந்துரை செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொலிஜியம் அமைப்பு, மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரரா பெயரை சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ் கன்வில்கர், கேரள ஐகோர்ட் நீதிபதி அசோக் பூஷன் ஆகியோரின் பெயர்களையும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply