சென்னை மெரினா கல்லூரியில் மாணவர்கள் மோதல். 2 மாணவர்கள் படுகாயம்.

presidency collegeசென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பேருந்து வழித்தடத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

இதேபோன்ற ஒரு சம்பவம் நேற்று மாலை “6 டி’ என்ற பேருந்தில் வந்த மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த  மாணவர்கள் தேவராஜ், பாலாஜி ஆகிய இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே நேற்று நடந்து சென்ற போது அங்கு வந்த “29 ஏ’ வழித்தட மாணவர்கள் தேவாவையும், பாலாஜியையும் திடீரெனத் தாக்கியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

 இந்த மோதலில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்

Leave a Reply