பெங்களூரில் இருந்து சென்னை வழியாக அந்தமான செல்லவிருந்த கல்லூரி மாணவர் ஒருவரின் பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் இன்று காலை பெங்களூரில் இருந்து வந்த விமானம் ஒன்றில் இருந்து ஹர்பத்ஷா என்ற 22 வயது கல்லூரி மாணவர் வந்தார். அவர் சென்னையில் இருந்து அந்தமான செல்லும் விமானத்தில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் இருந்தபோது அவ்வழியே வந்த விமான நிலைய காவலர்கள் இவர் மீது சந்தேகம் அடைந்து அவருடைய பையை சோதனை போட்டனர். அப்போது அவருடைய பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஹர்பத்ஷாவை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர் எதற்காக துப்பாக்கி குண்டு வைத்திருந்தார், எதாவது தீவிரவாத இயக்கத்திற்கும் அவருக்கு தொடர்பு உண்டா, அந்தமானுக்கு எதற்காக செல்கிறார் என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் காரணமாக சென்னை விமானநிலையத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு அடைந்தது.

Leave a Reply