லாக்டவுன் நேரத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் விற்பனை

கோடி கோடியாய் சம்பாதித்த 19 வயது கல்லூரி மாணவி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்து ஆன்லைனிலேயே கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

19 வயது கல்லூரி மாணவி ஹாலிடே என்பவர் ஆன்லைனில் தன்னை ஃபாலோ செய்பவர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி உள்ளார்

வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்த அந்த புகைப்படங்களை அவரை ஃபாலோ செய்யும் பலர் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், இதனால் மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டாலர் வரை சம்பாதிப்பதாகவும் கடந்த 6 மாதத்தில் மட்டும் அவர் பல கோடிகள் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து சொந்தமாக ஒரு அபார்ட்மெண்டில் வீடு ஒன்றை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது பிசினஸ் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த பிசினஸை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Leave a Reply