shadow

டொனால்ட் டிரம்ப் கட்சி தலைவரே ஹிலாரிக்குத்தான் ஓட்டு போடுவாராம்.

hilariஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

இதுவரை வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் என்று கூறி வரும் நிலையில் திடீரென டிரம்ப் கட்சியின் தலிஅவரும் , முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான காலின் பவெல் ஹிலாரி கிளிண்டனுக்கே எனது ஓட்டு என்று கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காலின் பவெல் தனது இமெயில் மூலம் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளதாவது: ‘டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர். அதிபர் தேர்தல் விவகாரத்தில் நான் வாய்திறக்க வேண்டும் என பலர் விரும்பினர். ஆனால் அதற்கான நேரத்துக்காக நான் காத்திருந்தேன். தற்போது அந்தக் காலம் கனிந்துவிட்டது. டிரம்ப் சொந்தக் கட்சிக்கே மோசமான எதிரியாக தென்படுகிறார். இதனால் ஹிலாரிக்கு தான் வாக்களிக்கப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

பவெலின் இந்த முடிவுக்கு ஹிலாரி கிளிண்டன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஏற்கெனவே ஒருசில குடியரசுக் கட்சியை சில தலைவர்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவராக மதிக்கப்படும் பவெலும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஓட்டு போடுவேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply