shadow

ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது

கோவை,பீளமேட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டார்.

டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.