shadow

சீனாவில் வாலிபரின் காதினுள் முட்டையிட்டு குஞ்சு பொறித்த கரப்பான் பூச்சி

shadow
கரப்பான் பூச்சி என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். இந்த கரப்பான் பூச்சிகள் நமது வீடுகளில் ஆங்காங்கே சுற்றித்திரியும் என்பதை பார்த்திருக்கின்றோம். ஆனால் சீனாவில் ஒரு வாலிபரின் காதிற்குள் பல நாட்களாக ஒரு கரப்பான் பூச்சி இருந்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த கரப்பான் பூச்சி, அந்த வாலிபரின் காதினுள் 25 முட்டைகளை இட்டு குஞ்சு பொறித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

தென்கிழக்கு சீனாவை சேர்ந்த லீ என்பவர் சமீபத்தில் கடந்த சில நாட்களாக தனது காதினுள் பயங்கர வலி இருப்பதாக மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அந்த வாலிபரின் காதினுள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் 25 குட்டி கரப்பான் பூச்சியும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பல நாட்களுக்கு முன்னரே வாலிபரின் காதிற்குள் சென்ற அந்த பெண் கரப்பான் பூச்சி, காதின் உள்ளேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த உடனே தீவிர சிகிச்சையின் மூலம் அனைத்து கரப்பான்பூச்சிகளையும் வெளியே எடுத்துள்ளார். அந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த hang’an Xiaobian Hospital என்ற மருத்துவமனையின் மருத்துவர் Yang Jing என்பவர் கூறும்போது, வாலிபர் லீ’யின் காது துவாரம் கிட்டத்தட்ட முழு அளவில் அடைத்துவிட்டதை நாங்கள் பார்த்தோம். இன்னும் சில மணி நேரங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால் அவருடைய காது நிரந்தரமாக செயல் இழந்து போயிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.

Leave a Reply