தினமும் 3 மணி நேரம் பவர்கட்: பொதுமக்கள் அதிர்ச்சி!

தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு என அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலக்கரி பற்றாக்குறை இருப்பதன் காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தினசரி 3 மணி நேரம் மின்வெட்டு இருக்கலாம் என அறிவித்துள்ளது

இதனை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பஞ்சாப் போல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களுக்கும் மின்வெட்டு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.